Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் ஆகும் லிவிங்ஸ்டன்!

Webdunia
வெள்ளி, 31 மார்ச் 2023 (08:09 IST)
தமிழ் சினிமாவில் சுந்தரபுருஷன் என்ற படத்தை இயக்கி அதில் நடித்து வெற்றிப் படமாக்கியவர் லிவிங்ஸ்டன். அதன் பின்னர் சினிமாவில் கதாநாயகனாகவும், வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் கலக்கியவர் லிவிங்ஸ்டன். இவர் ஒரு இயக்குனர் மற்றும் கதாசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருக்கு ஜோவிதா மற்றும் ஜமீனா என இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இப்போது ஜோவிதா சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். ஏற்கனவே சில சீரியல்களில் ஜோவிதா நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்போது தனது மகள் ஜோவிதாவை கதாநாயகி ஆக்கி, ஒரு படத்தை இயக்க உள்ளார் லிவிங்ஸ்டன். இந்த படத்தை ஆர் பி சௌத்ரி பைனான்ஸ் செய்து, லிவிங்ஸ்டன் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தில் கதாநாயகனாக ஜித்தன் ரமேஷ் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

வித்தியாசமான உடையில் கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பார்வையாளர்களைக் கவரும் குணா… ரி ரிலீஸில் நல்ல ஓப்பனிங்!

அமரன் முன்பே ரிலீஸ் ஆகியிருந்தால் உன் படத்தில் நடித்திருப்பேன்.. ராஜ்குமார் பெரியசாமியைப் பாராட்டிய விஜய்!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ ரிலீஸ் தேதி இதுவா?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments