Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கவுண்டமணியின் அடுத்த பட அறிமுக வீடியோ ரிலீஸ்!

கவுண்டமணியின் அடுத்த பட அறிமுக வீடியோ ரிலீஸ்!
, புதன், 16 ஆகஸ்ட் 2023 (08:59 IST)
கவுண்டமணி கடைசியாக நடித்த திரைப்படம் எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை திரைப்படம். இந்நிலையில் இப்போது 6 ஆண்டுகளுக்குப் பிறகு கவுண்டமணி ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பழனிச்சாமி வாத்தியார் என்று ஒரு படத்தில் நடித்து வரும் அவர் இப்போது ஒத்த ஓட்டு முத்தையா என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் ரிலீஸான நிலையில் இப்போது படம் சம்மந்தமான கிளிம்ப்ஸ் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் படத்துக்காக கவுண்டமணி தயாராகும் காட்சிகளை காட்டியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

தற்போது 83 வயதாகும் கவுண்டமணி இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். தமிழ் சினிமாவில் அதிக வயதில் கதாநாயகனாக நடித்த நடிகர் என்ற சாதனையை கவுண்டமணி படைத்துள்ளார். இதற்கு முன்னர் இதுபோன்ற ஒரு சாதனை தமிழ் சினிமாவில் நடந்திருக்குமா என்பது கேள்விக்குறிதான்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினி லோகேஷ் படத்தில் வில்லனாக நடிக்க இப்போதே துண்டு போட்ட பிரபல நடிகர்!