ராஜமௌலியின் மரியாத ராமண்ணா படத்தில் நடித்த கோசுரி வேணுகோபால் என்ற நடிகர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.
கொரோனா காரணமாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகைச் சேர்ந்த பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் ஒரு சிலர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தும் உள்ளனர். இந்நிலையில் மேலும் ஒரு பலியாக எஸ் எஸ் ராஜமௌலியின் மரியாத ராமண்ணா திரைப்படத்தில் நடித்த கோசுரி வேணுகோபால் என்ற நகைச்சுவை நடிகரும் உயிரிழந்துள்ளார்.
இவர் சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.