கவின் படத்துக்கு அனிருத் இசையா? …பட்ஜெட் தாங்குமா?

Webdunia
வெள்ளி, 17 மார்ச் 2023 (08:19 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கவனம் ஈர்த்தவர் சீரியல் நடிகர் கவின். அதன் பின்னர் பெரியத்திரையில் கவனம் செலுத்திய அவர் லிப்ட் உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். அதையடுத்து சமீபத்தில் அவர் நடித்துள்ள டாடா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. படத்தில் சில பிரச்சனைகள் மற்றும் உணர்வு சுரண்டல் காட்சிகள் இருந்தாலும், ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அதிலும் நகர்ப்புறங்களில் மல்டிப்ளக்ஸ் ரசிகர்களை இந்த படம் வெகுவாகக் கவர்ந்துள்ளது.

இதையடுத்து கவின், இப்போது தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களின் விருப்ப நடிகர்களில் ஒருவராகியுள்ளார். இந்நிலையில் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிப்பில், நடன இயக்குனர் சதீஷ் இயக்குனராக அறிமுகமாகும் முதல் படத்தில் கவின் நடிக்க ஒப்பந்தம் அகியுள்ளாராம். இந்த திரைப்படமும் காதல் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அனிருத்தின் சமீப கால பிளாக்பஸ்டர் ஹிட்களால் அவரின் சம்பளம் எக்குத்தப்பாக எகிறி உள்ளது. அதனால் கவினின் சின்ன பட்ஜெட் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார் என்ற தகவல் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எம்ஜிஆரையே எதிர்த்து கேள்வி கேட்டவரு மகேந்திரன்.. அவர பத்தி ராஜகுமாரனுக்கு என்ன தெரியும்?

நிதி அகர்வாலின் கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

டியூட் படத்தில் இருந்து ‘கருத்த மச்சான்’ பாடலை நீக்கவேண்டும்… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

இந்தி படத்துக்காக மூன்று மடங்கு சம்பளத்தைக் குறைத்துக் கொண்டாரா தனுஷ்?

அடுத்த கட்டுரையில்
Show comments