Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் அளவுக்கு எனக்கும் சம்பளம் கொடுங்கள்! காமெடி நடிகரின் டிவீட்டால் சர்ச்சை!

Webdunia
திங்கள், 27 ஏப்ரல் 2020 (08:53 IST)
நடிகர் விஜய் அளவுக்கு சம்பளம் கொடுத்தால் தானும் நிறைய நன்கொடை கொடுப்பேன் என்பது போல நகைச்சுவை நடிகர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்கள் அன்றாட வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் மக்களுக்கு உதவுவதற்காக பல்வேறு அரசியல் மற்றும் திரை பிரபலங்களும் நிதியுதவி செய்து வருகின்றனர்.

இதன் ஒரு கட்டமாக விஜய் 1.3 கோடி ரூபாய் அளவுக்கு நிதியுதவி அளித்துள்ளனர். மேலும் தமிழகத்துக்கு 50 லட்சமும் அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா, பாண்டிச்சேரி மற்றும் கேரளா அகியவற்றுக்கும் தலா 5 லட்சம் அளித்தார். இந்நிலையில் பாண்டிச்சேரி முதல்வர் நாராயணசாமி விஜய் போல மற்ற நடிகர்களும் பாண்டிச்சேரிக்கு நிதி அளிக்க வேண்டும் எனக் கூறி விஜய்க்கு நன்றி தெரிவித்தார்.

அந்த வீடியோவைப் பகிரிந்த நகைச்சுவை நடிகர் கருணாகரன் ‘same salary please’ எனக் குறிப்பிட்டு இருந்தார். அதாவது விஜய் போல எனக்கும் சம்பளம் கொடுத்தால் நானும் கொடுப்பேன் எனக் கூறுவது போல தெரிவித்து இருந்தார். இது விஜய் ரசிகர்களைக் கோபப் படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிற மொழிப் படங்களை இயக்கும் போது மாற்றுத்திறனாளி போல உணர்கிறேன்… AR முருகதாஸ் பதில்!

மீண்டும் இணையும் ‘தலைவன் தலைவி’ கூட்டணி… முக்கிய வேடத்தில் மணிகண்டன்!

அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ டிரைலரே இப்போதே தயார் செய்த சுந்தர் சி..!

ரிலீசுக்கு 5 மாதங்கள் இருக்கும்போதே கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்ட ‘ஜனநாயகன்’ விநியோகிஸ்தர்..!

ஷங்கர் அடுத்த படத்தில் ரஜினி, கமல் நடிக்கிறார்களா? வழக்கம்போல் வதந்தியை பரப்பும் யூடியூபர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments