Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கூழாங்கல் படத்தை பாராட்டிய நடிகர் கார்த்தி!

கூழாங்கல் படத்தை பாராட்டிய நடிகர் கார்த்தி!
, செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (16:02 IST)
சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்றுள்ள கூழாங்கல் படத்தை நடிகர் கார்த்தி பாராட்டியுள்ளார்.

இயக்குனர் வினோத்ராஜ் இயக்கத்தில் உருவான கூழாங்கல் திரைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது ரௌடி பிக்சர்ஸ்க்காக வாங்கி வெளியிடுகிறார். இந்த படம் முதலில் சர்வதேச திரைப்பட விழாக்களில் எல்லாம் ரிலீஸாகிக் கொண்டு இருக்கிறது. அதையடுத்து இப்போது ரோட்டர்டாம் விழாவில் புலி விருதுக்கான போட்டி பட்டியலில் கலந்துகொண்டு விருதினைப் பெற்றுள்ளது.

இந்த விருதின் மூலம் படக்குழுவினருக்கு 35 லட்சம் ரூபாய் அளவுக்கு பரிசுத்தொகைக் கிடைத்துள்ளது. மேலும் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் இந்த படம் கலந்துகொள்ள உள்ளது. இதையடுத்து இப்போது இந்த படத்தின் மீது தமிழ் சினிமாக்காரர்களின் பார்வை விழுந்துள்ளது.

நடிகர் கார்த்தி இந்த படத்தைப் பாராட்டி ‘கூழாங்கல் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். நம் அருகில் இருப்பவர்கள் இதுபோல ஒரு சர்வதேச விருதைப் பெறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அனைவரும் இந்த படத்தை திரையரங்குகளில் பார்க்கவேண்டும் என ஆசைப்படுகிறேன்’ எனக் கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித் அழைத்தும் வராத இயக்குனர்…. அதனால் அவருக்கு வாய்ப்பே இல்லை!