Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கமல்ஹாசனின் அதிரடி - அடுத்த படம் ‘தலைவன் இருக்கிறான்’

கமல்ஹாசனின் அதிரடி -  அடுத்த படம் ‘தலைவன் இருக்கிறான்’
, வியாழன், 27 ஜூலை 2017 (15:49 IST)
நடிகர் கமல்ஹாசன் அடுத்து ‘தலைவன் இருக்கிறான்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.


 

 
நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம்-2 படம் ஏறக்குறைய முடிவடையும் நேரத்தில் சில காரணங்களால் நிறுத்தப்பட்டது. அதன் பின் கமல்ஹாசன் வேறு சில படங்களில் நடித்தார். அதன் பின் அவர், தசாவதாரம் படத்தில் இடம் பெற்று ரசிகர்களை கவர்ந்த பல்ராம் நாயுடு கதாபாத்திரத்தை மையமாக வைத்து ‘சபாஷ் நாயுடு’ படத்தை துவங்கினார். 
 
அதில் ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷணன், தெலுங்கு நடிகர் பிரம்மானந்தம் உள்ளிட்ட பலர் நடிகர்கள் நடிக்கின்றனர். ஆனால், திடீரெனெ அவரது காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக, 7 மாதம் அவர் ஓய்வு எடுக்க வேண்டியதாயிற்று. அதன் பின் தற்போது அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
 
இந்நிலையில், பல்ராம் நாயுடு படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் துவங்கும் எனத் தெரிகிறது. அந்த படத்தை முடித்த பின், அவர் ‘தலைவன் இருக்கிறான்’ படத்தை தொடங்குவார் எனத் தெரிகிறது. 
 
சமீபகாலமாக, அவர் அரசியலுக்கு வருவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், ‘தலைவன் இருக்கிறான்’ என்கிற தலைப்பில் அவர் நடிப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜூலிக்கு ஒருவித மனநோய்; ஓங்கி ஒரு அறை விடனும்: கழுவி ஊற்றும் நடிகர்!