Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காளி வெங்கட் கதையின் நாயகனாக நடிக்கும் ‘அப்பனே முருகா’

காளி வெங்கட் கதையின் நாயகனாக நடிக்கும் ‘அப்பனே முருகா’

J.Durai

, வெள்ளி, 19 ஜூலை 2024 (10:50 IST)
ட்ரூ டீம்  என்டர்டைன்மெண்ட் சார்பில் R.சதீஷ் தங்கம், R.G.சேகர் மற்றும் சசிகுமார் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை இயக்குவதன் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் குரு ராமசாமி. 
 
இவர் மறைந்த இயக்குநர் ராசு மதுரவனிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர்.
 
காளி வெங்கட் கதையின் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் சரவணன் (சித்தப்பு), எம்.எஸ் பாஸ்கர், முனீஸ்காந்த், மதுமிதா, ஜானகி (கர்ணன்) சூப்பர்குட் சுப்பிரமணி, மோகனசுந்தரம் புதுவை பூபாலன் (டாணாக்காரன்) ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பல சர்வதேச விருதுகளை வென்ற ‘கிடா’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ஜெயபிரகாஷ் இந்தப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்,
 
அப்பன் தோற்ற ஊரில் பிள்ளைகள் ஜெயிக்க முடியாது என்று ஒரு பழமொழி சொல்லப்படுவது உண்டு. ஆனால் அப்படி தனது ஊரில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தோற்ற ஒருவன் அதிலிருந்து மீண்டு வாழ்க்கையில் ஜெயித்தானா, அவனது பிள்ளைகள் வாழ்க்கை என்ன ஆச்சு என்பதை அடிப்படையாக வைத்து இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. 
 
படம் பற்றி இயக்குநர் குரு ராமசாமி கூறியதாவது.....
 
இன்று பலகுடும்பங்கள் இந்த ஆன்லைன் ரம்மியால் தெருவிற்கு வந்துவிடுகின்றன. கண்ணுக்குத் தெரியாமல் பல குடும்பங்கள் சிதைந்து போகின்றன. நேசமும் பாசமும் தொலைந்து போகின்றன. இந்த வலை அவ்வளவு எளிதாகப் பின்னப்படுகிறது ஆசை வார்த்தைகளால். விழுந்த பின்பு வெளியேற இயலாத மாய வலை இது. இதை செண்டிமெண்ட் நகைச்சுவை கலந்து தருகிறோம். "அப்பனே முருகா" படப்பிடிப்பு நடந்து வருகிறது என்றார். 
 
சென்னையில் பூஜையுடன் படப்பிடிப்பு  துவங்கி நடைபெற்று வருகிறது.   
 
அடுத்து அம்பாசமுஅடுத்து அம்பாசமுத்திரம், பொள்ளாச்சி, கேரளா  ஆகிய பகுதிகளில் நடைபெற இருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை ஜான்வி கபூர் மருத்துவமனையில் அனுமதி.. என்ன ஆச்சு?