Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இனி அப்படி ஒரு காட்சியில் நடிக்கவே மாட்டேன்- கதிர் பேட்டி

Advertiesment
இனி அப்படி ஒரு காட்சியில் நடிக்கவே மாட்டேன்- கதிர் பேட்டி
, வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (09:55 IST)
பரியேறும் பெருமாள் படம் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகர் கதிர் கூறுகையில், ''நானாக தேடிப்போய் வாங்கிய வாய்ப்ப இது.  என் நடிப்பை விதவிதமாக வெளிப்படுத்த இந்த படத்தில் நிறைய வாய்ப்பு கிடைத்தது.

 
கதாநாயகன் எந்த மனநிலையில் இருக்கிறான் என்பதை உணர்ச்சிகரமாக வெளிப்படுத்தவேண்டிய ஒரு காட்சி. அதற்காக இரண்டுபக்கமும் பரபரப்பாக வாகனங்கள் சென்றுகொண்டிருக்கும், சென்டர் மீடியன் இல்லாத திருநெல்வேலி ஹைவே ரோட்டில், திடீரென நடுவில் உட்கார்ந்துவிடுவது போல ஒரு காட்சியைப் படமாக்கினார்கள். 
 
எந்தவித திட்டமிடலும் இல்லாமல் திடீரென எடுக்கப்பட காட்சி அது. ஏதோ ஒரு வாகனம் எதிர்பாராமல் ஓவர்டேக் பண்ணுவதற்காக சற்றே ஏறி வந்திருந்தாலும் என் கதை முடிந்திருக்கும்.. எப்படி அந்தக் காட்சியில் நடித்து முடித்தேன் என்பதே தெரியவில்லை. ஆனால் அன்று இரவு முழுதும் என்னால் தூங்கவே முடியவில்லை. அந்த பாதிப்பிலிருந்து மீளவே ஒருநாள் ஆனது. இனி அப்படி ஒரு காட்சியில் நடிக்கவே மாட்டேன்"  என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எப்படி உங்களுக்கு பைத்தியம் பிடிக்காமல் இருக்கு? அனந்த் வைத்தியநாதன்