Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜீவாவின் அகத்தியா ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு.. பின்னணி என்ன?

vinoth
வெள்ளி, 31 ஜனவரி 2025 (08:22 IST)
தமிழ் சினிமாவில் டிஷ்யூம் தொடங்கி கோ, சிவா மனசுல சக்தி, ஜிப்ஸி என பன்முக கதாப்பாத்திரங்கள் கொண்ட பல படங்களில் நடித்து வருகிறார் ஜீவா. தற்போது ஜீவா - ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் கூட்டணியில் அகத்தியா என்ற படத்திஒல் நடித்து வருகிறார். வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷன் தயாரிக்கும் இந்த படத்தை பாடலாசிரியர் பா.விஜய் இயக்குகிறார். இதில் ராஷி கண்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.

மிகப்பெரிய பொருட்செலவில் இந்த படம் தயாரிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. ஹாலிவுட்டில் வெளியான இண்டியானா ஜோன்ஸ் போன்ற பீரியட் சாகச படமாக ‘அகத்தியா’ உருவாகி வருவதாக தெரிகிறது.  இந்த படம் ஜனவரி 31 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் படத்தின் கிராஃபிக்ஸ் பணிகள் முடியாத காரணத்தால் இப்போது ரிலீஸ் பிப்ரவரி 28 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments