Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துணை நடிகை தற்கொலை வழக்கில் நடிகர் ஜெகதீஷை ஜாமீனில் எடுத்ததா புஷ்பா படக்குழு?

துணை நடிகை தற்கொலை வழக்கில் நடிகர் ஜெகதீஷை ஜாமீனில் எடுத்ததா புஷ்பா படக்குழு?
, திங்கள், 18 டிசம்பர் 2023 (10:22 IST)
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்த படத்தில் கேசவ் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி என்பவர் நடித்திருந்தார். இவர் சில ஆண்டுகளாக துணை நடிகை ஒருவரோடு லிவ் இன் உறவில் இருந்துள்ளார். அவர் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரை ஜெகதீஷ் கொடுமைப்படுத்தியதாக அந்த நடிகையின் தந்தை புகாரளித்துள்ளார்.

அதன் காரணமாக விசாரணையை மேற்கொண்ட போலீஸார் இப்போது புகாரில் உண்மை இருப்பதாக கண்டறிந்து ஜெகதீஷைக் கைது செய்துள்ளனர். புஷ்பா 2 திரைப்படத்திலும் ஜெகதீஷ் நடித்து வரும் நிலையில் அவரின் கைது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இப்போது ஜெகதீஷை 20 லட்ச ரூபாய் கட்டி புஷ்பா படக்குழு அவரை ஜாமீனில் எடுத்து அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருவதாக சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்றாலும் சமூகவலைதளங்களில் இந்த தகவல் வேகமாக பரவி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எனக்கு வீட்டில் முழு சப்போர்ட்டாக இருந்ததே சிவகுமார் அப்பாதான்… ஜோதிகா பதில்!