Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்த பிரபல நடிகர் மரணம்… ரசிகர்கள் அதிர்ச்சி!

Webdunia
சனி, 3 டிசம்பர் 2022 (08:47 IST)
வெண்ணிலா கபடிகுழு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஹரி வைரவன்.

2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு திரைப்படம் பல கலைஞர்களுக்கு நல்ல முகவரியை தந்தது. அந்த படத்தில் கபடி வீரராக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ஹரி வைரவன்.

அதன் பின்னர் குள்ளநரிக் கூட்டம் உள்ளிட்ட  சில படங்களிலும் அவர் நடித்திருந்தார். இந்நிலையில் நன்கு வளர்ந்து வந்த நிலையில் இவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவருக்கு சக்கரை நோய், இதய பிரச்சனைகள் மற்றும் சிறுநீரக செயலிழப்பு ஆகிய பிரச்சனைகள் இருந்துள்ளன. இதனால் அவர் கோமா நிலைக்கும் சென்றார். அதன் பின்னர் சிகிச்சையில் தேறிவந்த நிலையில் இப்போது அவர் மரணம் அடைந்துள்ளார்.

அவரின் மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அழகுப் பதுமையாக மிளுரும் சம்யுக்தா மேனன்… கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

கருநிற உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய ஷிவானி…!

ரிலீஸ் வேலைகளைத் தொடங்கிய ‘வீர தீர சூரன்’ படக்குழு… டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மதராஸி படத்தின் ஓடிடி வியாபாரத்தால் அப்செட் ஆன சிவகார்த்திகேயன்.. பின்னணி என்ன?

மாஸ்டர்ஸ் லீக் போட்டியிலுமா சண்டை போடுவீங்க… யுவ்ராஜை முறைத்த மேற்கத்திய வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments