Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நான் அரசியலில் இருந்து விலகினாலும்அரசியல் என்னை விட்டு விலகவில்லை: பிரபல நடிகர்

Chiranjeevi
, செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (15:22 IST)
நான் அரசியலில் இருந்து விலகினாலும் அரசியல் என்னை விட்டு விலக வில்லை என பிரபல நடிகர் ஒருவரின் ஆடியோ திடீரென சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது 
 
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிரஞ்சீவி என்பதும், அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தனிக்கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டார் என்பதும் தெரிந்ததே. ஆனால் எதிர்பார்த்த வெற்றி பெறாததால்  அவர் தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்து கொண்டார்
 
இந்த நிலையில் அரசியலில் இருந்து விலகி தற்போது சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் என்பதும் அவர் இப்போது மூன்று படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நான் அரசியலில் இருந்து விலகி இருக்கிறேன் ஆனால் அரசியல் என்னை விட்டு விலகவில்லை என்று அவர் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து அவர் விரைவில் ஆந்திர அரசியலில் முழு வீச்சில் தீவிரமாக ஈடுபடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''இனிமேல் அப்படி செய்ய மாட்டேன்''...கதறி அழுத நடிகர் கூல் சுரேஷ்