தமிழ் சினிமாவில் சிறிய வேடங்களில் நடித்து, பிரகு குறும்படங்களீல் நடிக்க ஆரம்பித்தார். அப்போது குறுப்படங்களில் நடித்து கொண்டிருந்த ரேஷ்மி மேனனை காதலித்தார். மிகவும் வேகமாக வளர்ந்த பாபி சிம்ஹா. ஜிகர்தண்டா படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றார்.
இதைத்தொடர்ந்து கடந்தாண்டு ஏப்ரல் 22ம் தேதி இவர்களது திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு ரேஷ்மி நடிப்பதை நிறுத்தி விட்டார். இந்த தம்பதிகளுக்கு இடையே விரிசல் என்று வந்த வதந்தியை பாபி சிம்ஹா அப்போதே மறுத்து இருந்தார்.
இதற்கிடையே, ரேஷ்மி மேனன் கருவுற்றிருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது. அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சியும் நடந்தது. இந்நிலையில் நேற்று இவர்களுக்கு முதல் பெண் குழந்தை பிறந்துள்ளது.