Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வீட்டுக்கு வந்த பிரச்சனை! நடுத்தெருவில் புலம்பிய பிரபல .டி.வி நடிகர்!

Advertiesment
வீட்டுக்கு வந்த பிரச்சனை! நடுத்தெருவில் புலம்பிய பிரபல .டி.வி நடிகர்!
, புதன், 13 பிப்ரவரி 2019 (16:07 IST)
கே.பாலசந்தரால் சின்னத்திரைக்கு அறிமுகப்படுத்தப்பட்டு சன் டிவியில் ஒளிபரப்பான கோலங்கள், திருமதி செல்வம், பந்தம் உட்பட பல சீரியல்களில் நடித்தவர் நடிகர் பிர்லா போஸ்.
 

 


இவர் ‘தனி ஒருவன்’, ‘துப்பறிவாளன்’ போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில்  வெற்றி பெற்று தற்போதைய சங்கத்தில் செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். இவர் தன் வீட்டு உரிமையாளர் மீது கமிஷனர் ஆபீஸில் புகார் கொடுத்துள்ளார்.  

இதுகுறித்து அவர் அளித்துள்ள புகாரில், 
 
நான் மதுரவாயல் பகுதியில் ஐந்து ஆண்டுகளாக வசித்து வருகிறேன். இந்த வீட்டை பாலாஜி என்பவரிடம் குத்தகைக்கு வங்கியிருந்தேன். ஒருநாள், வங்கியில் இருந்து வந்து இந்த வீடு ஜப்தியில் உள்ளது. உடனே காலி செய்ய வேண்டும் என்று கூறினார்.  
 
பிறகு தான் இந்த வீட்டின் உரிமையாளர் ஆறுமுகம் என்பவர் என்று தெரிய வந்தது. இந்த வீட்டை வாங்குவதற்காக  நான் பல லட்சங்களை ஏமாந்துள்ளேன் என்று தெரியவந்தது.
 
500 சதுர மட்டும் கொண்ட இந்த வீட்டை 920 சதுர அடி என்று கணக்கு காட்டி வங்கியில் லோன் வாங்கியிருக்கிறார்கள்.  தற்போது வீட்டை காலி செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். அதுமட்டுமின்றி , பிப்ரவரி18-ம் தேதிக்குள் வீட்டை காலி செய்ய வேண்டும் என்றும் இல்லையெனில் அதற்கான நடவடிக்கை எடுக்க இருப்பதாகக் கடிதம் அனுப்பியுள்ளார்கள்.
 
ஆதலால் , ஏமாற்றிய பாலாஜி, ஆறுமுகம் மற்றும் அந்த வங்கி மீதும் நடவடிக்கை எடுக்குமாறும் என் குடும்பத்துக்கும் வீட்டுக்கும் எந்தவித தொந்தரவு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுத்து நியாயத்தை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.  என அவர் கூறியுள்ளார்  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று 'கிஸ் டே' முத்தம் பற்றி உங்களுக்கு தெரியாத சில தகவல்கள் இதோ!