Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தம்பி திருமணத்தில் தளபதி விஜய் - தீயாய் பரவும் நடிகர் அதர்வா வெளியிட்ட போட்டோ!

Advertiesment
தம்பி திருமணத்தில் தளபதி விஜய் - தீயாய் பரவும் நடிகர் அதர்வா வெளியிட்ட போட்டோ!
, திங்கள், 20 ஏப்ரல் 2020 (17:45 IST)
மறைந்த நடிகர் முரளியின் மகனான இளம் நடிகர் அதர்வா ஏகப்பட்ட பெண் ரசிகைகள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். ‘பானா காத்தாடி’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அதர்வா தொடர்ந்து பரதேசி, இரும்பு குதிரை, பூமராங் , இமைக்கா நொடிகள் என பல வெற்றி படங்களை கொடுத்து இளம் பெண்களின் கனவு கதாநாயகனாக வலம் வருகிறார்.

அதர்வாவுக்கு காவியா என்ற அக்காவும், ஆகாஷ் என்ற தம்பியும் இருக்கிறார்கள். அவரது தம்பி ஆகாஷ் நடிகர் விஜய்யின் நெருங்கிய உறவுக்கார பெண் ஒருவரை காதலித்து வந்தார். மதத்தை சார்ந்ததால் இருவீட்டு உறவினர்களும் இவர்களின் திருமணத்தை குறித்து ஆலோசனை செய்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நட்சத்திர ஹோட்டலில் இந்த திருமணம் நடைபெற்றது.

அதில் தளபதி விஜய் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில் தற்போது தம்பியின் திருமணத்தில் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை நடிகர் அதர்வா தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இருவரும் பேசி சிரிப்பதுபோல் உள்ள இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்கள் முழுவதும் தீயாய் பரவி சூப்பர் வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மனித நேயத்துடன் நடந்து கொள்ளுங்கள்: டாக்டர் உயிரிழப்பு விவகாரம் குறித்து நடிகர் விவேக்