Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் சங்க கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா: பங்கேற்ற ரஜினி, கமல்!

Advertiesment
நடிகர் சங்க கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா: பங்கேற்ற ரஜினி, கமல்!
, வெள்ளி, 31 மார்ச் 2017 (10:38 IST)
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக சென்னை தியாகராயநகரில் உள்ள ஹபிபுல்லா சாலையில் 19 கிரவுண்ட் நிலத்தில் புதிய கட்டிடம் கட்டப்படும் என்று அறிவித்தனர். அதன்படி வருகிற 31 ஆம் தேதி சங்க கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா  நடத்துவது. விழாவுக்கு நடிகர் கமல், ரஜினியை அழைப்பது உள்ளிட்ட சங்கம் கட்டடம் தொடர்பான பல தீர்மானங்கள்  தீர்மானிக்கப்பட்டன.

 
நடிகர் சங்கத்தில் தற்போது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் கட்டுமான  பணிக்கு ஒவ்வொரு செங்கலை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. அதன்படி, இன்று தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. 
 
இந்த விழாவில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், துணைத் தலைவர் பொன்வண்ணன்  ஆகியோர் முதல் செங்கலை எடுத்து வைத்து அடிக்கல் நாட்டினர். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு நடிகர்களும் ஒவ்வொரு செங்கலை வைத்து அடிக்கல் நாட்டினர். இந்த விழாவில் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்ட ரஜினிகாந்த், கமல்ஹாசன்  ஆகியோர் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. சற்று தாமதமாக வந்த கமல் மற்றும் ரஜினி புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரிலீஸ் தினத்தில் 'கவண்' படத்திற்கு கிடைத்த உற்சாக செய்தி