சீனாவில் இருந்து உலகில் பல்வேறு நாடுகளுக்கு கொரொனா வைரஸ் பரவி வருகிறது. இதனைத் தடுக்க பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிகப்பட்டுள்ளது.அதேசயம் அனைத்து தொழில்துறையினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், இந்திய சினிமாத்துறையும் கடந்த 3 மாதமாத காலமாக முடங்கியுள்ளது. இந்நிலையில், ஷுட்டிங் முடிந்து, போஸ்ட் புரொடெக்ஸன் வேலைகள் முடிவடைந்த படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மலையாள சினிமா வருங்காலத்தில் சிறப்பாக இயங்க வேண்டும் என்றால் நடிகர், நடிகைகள்தங்கள்சம்பளத்தில் 50 சதவீதத்தை குறைக்க வேண்டும் என மலையாள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்தனர், இதற்கிடையே நேற்று கொச்சியில் நடைபெற்ற மலையாள நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் முன்னணி நடிகர் நடிகைகளிடம் பேசியதன் அடிப்படையில், கொரொனா பிரச்சனைகள் முடிவடையும் வரை முன்னணி நடிகர், நடிகைகள் எல்லோரும் தங்கள் சம்பளத்தில் சுமார் 50% குறைத்துக் கொள்வது என்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.