Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான் அம்பானி குடும்பம் இல்ல… பிரபல தமிழ் நடிகரை டேக் செய்யும் வட இந்தியர்… சுவாரஸ்ய பின்னணி!

Advertiesment
அம்பானி சங்கர்
, வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (09:08 IST)
பிரபல தமிழ் சினிமா நடிகர் சங்கர் ‘அம்பானி சங்கர்’ என்ற திரைப் பெயரால் அழைக்கப்பட்டு வருகிறார்.

தமிழ் சினிமாக்களில் பல நகைச்சுவைக் காட்சிகளில் நடித்து பிரபலம் ஆனவர் அம்பானி சங்கர். அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் நடித்த பின்னர் இந்த பெயரால் அவர் அழைக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் வட இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் ஜியோ நிறுவனம் தொடர்பான ஒரு புகாரை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் அம்பானி குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரின் பெயரையும் டேக் செய்துள்ளார். அப்போது அம்பானி சங்கர் என்ற பெயரில் டிவிட்டரில் இருந்த சங்கரையும் டேக் செய்ய, பதறிப் போன சங்கர் “டிவிட்டர்ல வடக்கன்ஸ் நான் ஏதோ அம்பானி குடும்பத்தை சேர்ந்தவன்னு நினைச்சு என்னைய tag பண்றாங்க” என்று டிவீட் செய்ய அது மீம்களாக பரவி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நயன்தாரா- அல்போன்ஸ் புத்திரன் கூட்டணியில் அடுத்த படம்… தமிழக உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!