வில்லனாக நடித்துள்ள பிரபுதேவா
, சனி, 24 ஜூன் 2017 (10:17 IST)
கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள படத்தில், வில்லனாக நடித்திருக்கிறாராம் பிரபுதேவா.
குறும்படங்களை இயக்கி, அதன்மூலம் சினிமாவுக்குள் நுழைந்தவர்களில் கார்த்திக் சுப்பராஜும் ஒருவர். தன்னுடைய ‘ஸ்டோன் பெஞ்ச்’ நிறுவனத்தின் மூலம் குறும்படங்களைத் தயாரித்துவந்த கார்த்திக் சுப்பராஜ், முதன்முறையாக இரண்டு பெரிய படங்களைத் தயாரித்துள்ளார்.
முதல் படம், ரத்னகுமார் இயக்குனராக அறிமுகமாகும் ‘மேயாத மான்’. இந்தப் படத்தில் வைபவ் ஹீரோவாக நடிக்க, விஜய் டிவி ‘கல்யாணம் முதல் காதல் வரை’ புகழ் பிரியா பவானிசங்கர் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இரண்டாவது படம், கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ‘மெர்குரி’. தனுஷுக்காக காத்திருந்த கார்த்திக் சுப்பராஜ், கடுப்பாகிப்போய் பிரபுதேவாவை வைத்து ஒரு படத்தை இயக்கிவருகிறார் என்று ஏற்கெனவே சொல்லியிருந்தோம். அந்தப் படம் இது.
வசனங்கள் எதுவும் இல்லாமல், உடல் மொழி மற்றும் பின்னணி இசை மூலம் கதையை பார்வையாளர்களுக்கு கடத்தும் சைலண்ட் ஃபிலிமாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது. இதில், வில்லனாக நடித்துள்ளார் பிரபுதேவா. கல்லூரி மாணவர்களின் வாழ்க்கை பற்றிய இந்தக் கதையில், ‘ஜில் ஜங் ஜக்’ சனத் ரெட்டி, ‘டப்ஸ்மாஸ்’ புகழ் தீபக் பரமேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். திரு ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்