Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எக்ஸ் வீடியோஸ் பற்றி இயக்குநர் சஜோ சுந்தர் ஓபன் டாக்!

Advertiesment
எக்ஸ் வீடியோஸ் பற்றி இயக்குநர் சஜோ சுந்தர் ஓபன் டாக்!
, திங்கள், 23 அக்டோபர் 2017 (14:54 IST)
இணையதங்களில் வெளியாகும் ஆபாச வீடியோ எக்ஸ் வீடியோஸ் என்று அழைப்பார்கள். அதனையே தலைப்பாக கொண்டு  உருவாகியுள்ள படம் எக்ஸ் வீடியோஸ். அபிநவ், நிஜய், ஷான், அஜய் ராஜ், ஆஹிருதி சிங் நடித்துள்ளனர். ஹரி மற்றும் பிரகாஷ்ராஜ் இயக்கிய படங்களில் பணியாற்றிய சஜோ சுந்தர் இயக்கியுள்ளார்.

 
படம் குறித்து அவர் இயக்குநர் கூறியது, கல்லூரி மாணவிகளையும், குடும்பப் பெண்களையும் இணையதள ஆபத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள படம் இது. தலைப்பைப் பார்த்து கிளுகிளுப்பான படம் என்று நினைக்க வேண்டாம்.  த்ரில்லர் கதை.  தினமும் செல்போனில் ஆபாச வீடியோக்கள் பார்த்து ரசிக்கும் எனக்கு தெரிந்த நபரின் மனைவியின் படம் இணையதளத்தில் இடம்பெற்றிருந்ததைப் பார்த்து அதிர்ந்தேன். அவருக்கே தெரியாமல் அந்த தம்பதியின் அந்தரங்கம் படமாக்கப்பட்ட அந்த  வீடியோ, இணையதளத்தில் எப்படி பதிவேற்றம் செய்யப்பட்டது என்று ஆராய்ந்தபோது, பல அதிர்ச்சிகரமான உண்மைகள்  வெளியே தெரியவந்தது. அதை சொல்லும் படம்தான் இது.
 
அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதியின்றி தவிக்கும் மாணவிகளுக்கு உதவும் பொருட்டு, இப்படத்தில் கிடைக்கும் லாபத்தில் அரசாங்கப் பள்ளிகளில் கழிப்பறை கட்டிக் கொடுக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இப்படம் தமிழ் மற்றும் ஹிந்தியில் எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதுக்கே இப்படியா? இன்னும் எடிட் பண்ணிய காட்சிகளையெல்லாம் விடப்போறோம்: மெர்சல் எடிட்டர்