Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிடும் ரஜினிகாந்த்?

அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிடும் ரஜினிகாந்த்?
, செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (18:03 IST)
நடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் ரசிகர்களை சந்திக்க இருப்பதாகவும், அப்போது அரசியல் பிரவேசம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

 
நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் (மே மாதம்) ரசிகர்களை சென்னைக்கு அழைத்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். 5 நாட்கள் 17 மாவட்டங்களை சேர்ந்த ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் சந்திப்பு நிகழ்ந்தது.
 
இந்நிலையில் ரஜினியின் 2.0 படப்பிடிப்பு ஒரு மாதத்துக்கு முன்பு முடிவடைந்து டப்பிங், ரீரிக்கார்டிங், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்  உள்ளிட்ட தொழில் நுட்ப பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த வருடம் ஜனவரி மாதம் வெளியிட திட்டமிட்டு உள்ளனர். தற்போது ‘காலா’ படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இதுவரை 80 சதவீதம் படப்பிடிப்பு  முடிந்துவிட்டதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.
 
இந்நிலையில் இரண்டு படங்களின் படப்பிடிப்பும் முடிவடைவதை தொடர்ந்து விடுபட்ட 15 மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை அடுத்த மாதம்(அக்டோபர்) 6 நாட்கள் தொடர்ச்சியாக சந்திக்க ரஜினிகாந்த் திட்டமிட்டு இருப்பதாகவும், அப்போது அரசியல் பிரவேசம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் இணையும் பிரபுதேவா – விஜய் கூட்டணி?