Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரசியல் வருவது குறித்து வெளிப்படையாக பதில் அளித்த தல அஜித்

Advertiesment
அரசியல் வருவது குறித்து வெளிப்படையாக பதில் அளித்த தல அஜித்
, செவ்வாய், 31 அக்டோபர் 2017 (11:26 IST)
தமிழ் சினிமா நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், விஷால் ஆகியோர் அரசியலுக்கு வர ஆர்வப்பட்டு, அதற்கான காரியங்களில் இறங்கி உள்ளனர். இவர்கள் தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும் என்று, அவர்களைக் காட்டிலும், அவர்களது ரசிகர்களே அதிக  அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

 
இந்நிலையில் நடிகர் அஜித் ரசிகர்களும், அவரும் தீவிர அரசியலுக்கு வர வேண்டும் என்று விரும்புகின்றனர். இதை, அஜித்திடமே சமீபத்தில் அவர்கள் வெளிப்படுத்த, அரசியலெல்லாம் எனக்கு ஒத்து வராது. அதைப் பற்றி எனக்கு எதுவும்  தெரியாது. இந்த விஷயத்தை யாரும் என்னை வற்புறுத்த வேண்டாம் என தெரிவித்து விட்டதாகக் கூறப்படுகிறது.
 
இது குறித்து அஜித் ரசிகர்களில் சிலர் கூறுகையில் நடிகர் விஜய்யைக் காட்டிலும் கூடுதலாக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் அஜித். அவருக்கு இன்றைக்கும் தமிழக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதற்காக, சினிமாவில் எப்படி வேண்டுமென்றாலும் நடித்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்றெல்லாம் அவர் நினைப்பதில்லை. படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால்,  இழுவை எதுவும் இல்லாமல் நடித்துக் கொடுத்து விடுவார்.
 
அஜித் இல்லாதவர்களுக்கு உதவுவதை ஒரு நாளும்  தன்னுடைய விளம்பரத்துக்காக பயன்படுத்த மாட்டார். விழாக்கள், நிகழ்ச்சிகள் என பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவதில்லை. இருந்தபோதும், ரஜினி, கமல், விஜய் போன்றவர்கள் காட்டும் அரசியல் ஆர்வத்தைத் தொடர்ந்து, அஜித்தையும் அரசியலில் இறக்கிவிட வேண்டும் என்று ஆர்வப்பட்டு, அவரிடம் கேட்டுள்ளனர் அவரது ரசிகர்கள்.
 
பதில் கூறிய நடிகர் அஜித் அரசியல் எனக்கு சரிபட்டு வராது. யாருக்கும் போட்டியாக எதையும் செய்யும் இயல்பு எனக்குக்  கிடையாது என்று வெளிப்படையாக தெரிவித்து விட்டார். இதனால், அஜித்தை அரசியலுக்கு இழுக்கும் முயற்சி, ஆரம்பத்திலே  தோல்வியில் முடிந்து விட்டது என தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜோடியாக மாறிய பிக்பாஸ் ஹரிஷ் கல்யாண்-ரைசா