Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்த விஷயத்தில் அர்ஜுன் ரெட்டியை மிஞ்சும் ஜி.வி.பிரகாஷ்: ஆதிக் தகவல்!!

Webdunia
ஞாயிறு, 15 அக்டோபர் 2017 (13:03 IST)
ஜி.வி.பிரகாஷ் குமாரை வைத்து திரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் ஒரு சர்ச்சை கருத்தை டிவிட்டரில் பதிவு செய்து பின்னர் நீக்கியுள்ளார்.


 
 
தெலுங்கு படங்களில் அதிக முத்த காட்சிகள் அனுமதிப்பது போல ஏன் தமிழ் சினிமாவில் சென்சார் போர்டு அனுமதிப்பதில்லை என  கேள்வி எழுப்பியுள்ளார். 
 
திரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் முதலில் 7 முத்த காட்சிகள் இருந்தன, ஆனால் 6 காட்சிகளை நீக்கிய பிறகு தான் படத்திற்க்கு A சான்றிதழ் கொடுக்கப்பட்டது என ஆதிக் தெரிவித்துள்ளார். 
 
ஆனால், அர்ஜுன் ரெட்டி படத்தில் மொத்தம் 16 லிப் டு லிப் முத்த காட்சிகள் இருந்ததை அவர் சுட்டிகாட்டியுள்ளார். இதோடு, என் அடுத்த படத்தில் அதை விட அதிகமாக காட்சிகள் வைப்பேன் என பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
 
ஆதிக்-க்கின் அடுத்த படம் ஜீ.வி.பிரகாஷ் உடன் நடைபெற்று வருகிறது. எனவே, இந்த படத்தில் தான் அதிக முத்தக்காட்சிகள் இருக்ககூடும். 
 
இந்தபடம் திரிஷா இல்லனா நயன்தாராவின் இரண்டாம் பாகமாக இருக்கும் என செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜொலிக்கும் ஜிகினா உடையில் அசத்தல் போஸில் ஜான்வி கபூர்!

பச்சை நிற உடையில் ஜொலிக்கும் அழகில் பிரியா வாரியர்!

தேசிய விருது பெற்ற ஜி வி பிரகாஷுக்கு பரிசளித்த ஏ ஆர் ரஹ்மான்!

மம்மூட்டி & மோகன்லால் இணைந்து நடிக்கும் படத்தின் டீசர் ரிலீஸ் அப்டேட்!

ஜீவா நடிக்கும் ‘தலைவர் தம்பியின் தலைமையில்’… தமிழில் அறிமுகமாகும் மலையாள இயக்குனர்!

அடுத்த கட்டுரையில்
Show comments