அரசியல் கட்சி ஆரம்பிக்கின்றாரா பிக்பாஸ் ஆரி?
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	பிக் பாஸ் வின்னர் ஆரி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஒரு சில திரைப்படங்களின் வாய்ப்புகளை பெற்று உள்ளார் என்பதும் அவ்வப்போது அவர் தனது சமூக வலைதளத்தின் மூலம் ரசிகர்களுடன் உரையாடி வருகிறார் என்பதும் தெரிந்ததே
 
									
										
			        							
								
																	
	 
	இந்த நிலையில் இன்று மாலை நான்கு முப்பது மணிக்கு அவர் ஓஎம்ஆர் சாலையில் உள்ள மெரினா மால் என்ற இடத்தில் ரசிகர்களை சந்திக்க போகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ரசிகர்களை நேருக்கு நேராக முதல் முதலாக சந்திப்பதை அடுத்து இந்த நிகழ்ச்சி மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது 
 
									
											
							                     
							
							
			        							
								
																	
	 
	இந்த நிலையில் சற்று முன்னர் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எனது அடுத்த கட்ட நகர்வு குறித்து ரசிகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன் என்று குறிப்பிட்டு உள்ளார். எனவே இன்று அவரது தரப்பில் இருந்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
									
			                     
							
							
			        							
								
																	
	 
	அனேகமாக ஆரி ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் சேருவார் அல்லது அரசியல் கட்சியை தொடங்குவார் என்றும் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த புகழ், பிரபலத்தை வைத்து ஆரியால் அரசியலில் ஈடுபட முடியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்