Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிந்து மாதவிக்காக ஓவியாவை கழட்டி விடும் ஆரவ்: கோவணத்துடன் நிற்பதாக பிரபல நடிகை தாக்கு!

பிந்து மாதவிக்காக ஓவியாவை கழட்டி விடும் ஆரவ்: கோவணத்துடன் நிற்பதாக பிரபல நடிகை தாக்கு!

Advertiesment
பிந்து மாதவிக்காக ஓவியாவை கழட்டி விடும் ஆரவ்: கோவணத்துடன் நிற்பதாக பிரபல நடிகை தாக்கு!
, புதன், 2 ஆகஸ்ட் 2017 (18:19 IST)
நல்லா போய்ட்டு இருந்த ஓவியாவின் காதல் வாழ்க்கையில புயல் மாதிரி வந்தார் பிந்து மாதவி. இத்தனை நாட்கள் கொஞ்சி குலாவி வந்த ஓவியா ஆரவ் காதல் ஜோடிகள் தற்போது முட்டிக்கொண்டும் மோதிக்கொண்டும் இருக்கின்றன.


 
 
பிந்து மதவி வந்த பின்னர் தான் ஆரவ் ஓவியாவை புறக்கணிக்க ஆரம்பித்துள்ளார். ஒட்டுமொத்த பிக் பாஸ் குடும்பமும் ஓவியாவை புறக்கணித்த போது ஓரளவுக்கு ஆதரித்த ஆரவ் தற்போது ஏன் அவரை புறக்கணிக்க வேண்டும்.
 
இந்நிலையில் ஆரவ் குறித்து பிரபல நடிகை ஆர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் பல அதிரடி தகவல்களை கூறியுள்ளார். அதில் பிந்து மாதவிக்காக தான் ஆரவ் ஓவியாவை கழட்டி விடுகிறார் என ஆர்த்தி மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார்.
 
ஆரவின் லீலைகள் குறும்படம் சனிக்கிழமை இருக்கு என கூறியுள்ள ஆர்த்தி, கைத்தறி வேஷ்டி கட்டினவன் பட்டு வேஷ்டி கிடைகும்னு நினச்சு கட்டின வேஷ்டிய கழட்டி விட்டுட்டு கோவணத்தோட நின்னானாம். புருஞ்சவன் பிஸ்தா என கூறியுள்ளார்.
 
இதில் ஆரவ் புதிதாக வந்துள்ள பிந்து மாதவிக்கு ஆசைப்பட்டு ஏற்கனவே இருந்த ஓவியாவை கழட்டி விட்டுட்டு கடைசியில் எதுவும் இல்லாமல் தான் நிற்க போகிறார் என ஆர்த்தி மறைமுகமாக கூறியுள்ளார்.
 
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதால் ஆர்த்திக்கு ஆரவை பற்றி நன்கு தெரியும். இருந்தாலும் ஆரவை பற்றி எதிர்மறையாக ஆர்த்தி கூறுவது பலரையும் யோசிக்க வைத்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் கோட்டையை பிடிக்கும் முயற்சியில் அஜித்!!