Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் சார் இருக்கும் போது எதுக்கு டி ஏஜிங்.. இளமையான தோற்றம் குறித்து ஆதிக் பகிர்ந்த தகவல்!

vinoth
புதன், 9 ஏப்ரல் 2025 (10:48 IST)
அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘குட் பேட் அக்லி’ நாளை உலகமெங்கும் ரிலீஸாகவுள்ளது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தில் த்ரிஷா ,சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

அந்த டிரைலரில் அஜித்தின் அமர்க்களம், தீனா, பில்லா, மங்காத்தா என ஏகப்பட்ட படங்களின் காட்சிகளை நினைவூட்டும் வசனம் மற்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் அஜித்தின் இளமையானத் தோற்றமும் டிரைலரில் இடம்பெற்றிருந்தது. அது ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த இளமையான லுக்குக்கு அஜித்துக்கு டி ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப் பட்டதா என்ற கேள்வி எழுந்தது. அதற்கு ஆதிக் ரவிச்சந்திரன் பதிலளித்துள்ளார். அதில் “அஜித் சார் இருக்கும்போது எதற்கு டி ஏஜிங் தொழில்நுட்பம். அவர் கடுமையான டயட்டை எடுத்துக்கொண்டு உடல் எடையைக் குறைத்து வந்தார். அவரை அந்தத் தோற்றத்தில் பார்த்தபோது நான் பிரம்மித்து விட்டேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிதி ஷங்கரின் அழகிய க்ளிக்ஸ்… இன்ஸ்டா வைரல் ஆல்பம்!

கமலுக்கே ‘தக்லைஃப்’ படத்தை போட்டு காண்பிக்கவில்லை.. அடித்துவிடும் பொய்யர்கள்..!

சந்தன நிற உடையில் க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் சமந்தா!

வாடிவாசலுக்குப் பிறகு ஆவேஷம் இயக்குனரின் இயக்கத்தில் சூர்யா..!

பட்டங்களை வாங்கி குவிக்கும் நட்சத்திரங்களின் வாரிசுகள்.. சூர்யா, தனுஷை அடுத்து சிம்ரன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments