தொடரும் ‘இட்லி கடை’ நட்பு.. அருண் விஜய்க்காக குரல் கொடுத்த தனுஷ்!

Webdunia
புதன், 9 ஏப்ரல் 2025 (10:40 IST)
பல வருடங்களாக போராடி வந்த அருண் விஜய்க்கு என்னை அறிந்தால் திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. அதற்கடுத்து தடையற தாக்க மற்றும் தடம் போன்ற படங்கள் வெற்றிப் படங்களாக கொடுத்து இப்போது முன்னணி நடிகராகியுள்ளார். சமீபத்தில் பாலா இயக்கத்தில் அவர் நடித்த ‘வணங்கான்’ படம் ரிலீஸாகி பரவலானப் பாராட்டுகளைப் பெற்றது.

இதையடுத்து அவர் மான் கராத்தே மற்றும் கெத்து ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் திருக்குமரன் (க்ரிஷ் திருக்குமரன்) இயக்கத்தில் ரெட்ட தல படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிடிஜி யூனிவர்சல் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் தன்யா ரவிச்சந்திரன் மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சாம் சி எஸ் இசையமைக்கிறார்.   படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன்பே நிறைவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை சாம் சி எஸ் இசையில் தனுஷ் பாடியுள்ளார். அருண் விஜய் தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தில் வில்லனாக நடித்துள்ளார். அந்த படத்தின் போது ஏற்பட்ட நட்பின் அடையாளமாக தனுஷ் இந்த பாடலைப் பாடிக் கொடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அவர் சொன்ன வார்த்தையை சொல்லவா? கானா வினோத்தை கடுமையாக சாடும் திவாகர்

என்னுடைய மார்பிங் படத்தை என் மகன் பார்த்தால் என்ன நினைப்பான்? பிரபல நடிகை வருத்தம்..!

தாய்மார்களுக்கு 8 மணி நேர வேலை.. குழந்தையை அலுவலகத்திற்கு அழைத்து வர அனுமதி: தீபிகா படுகோன்

அடுத்த கட்டுரையில்
Show comments