Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆதி குணசேகரனுக்கு என்ன ஆச்சு? எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய திருப்பம்!

ஆதி குணசேகரனுக்கு என்ன ஆச்சு? எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய திருப்பம்!
, திங்கள், 31 ஜூலை 2023 (07:45 IST)
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் டி ஆர் பி ரேட்டிங்கில் உச்சம் தொட்டது. சமீபத்தில் இந்த சீரியல் 9.3 என்ற புள்ளியை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர் சீரியல் குழுவினர். இந்நிலையில் இப்போது இந்த சீரியல் 400 ஆவது எபிசோட்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியல் தமிழில் அடைந்த வெற்றியை அடுத்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி மற்றும் மராத்தி என ஐந்து மொழிகளில் டப் ஆகி ஓடிக் கொண்டிருக்கிறதாம்.

இந்த சீரியலின் இத்தகைய வெற்றிக்கு அதில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் மாரிமுத்துவின் நடிப்பும் ஒரு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.  ஆணாதிக்கமும் கட்டுப்பாடும் மிக்க ஒரு குடும்ப தலைவராக அவரின் நடிப்பு வெகுவாக ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் இப்போது அந்த சீரியலில் முக்கியத் திருப்பமாக அவரது கதாபாத்திரத்துக்கு கை கால் செயலிழுந்துள்ளது. தன்னுடைய சொத்துகளை ஜீவானந்தம் அபகரித்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அவருக்கு மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு கைகால் செயலிழந்துள்ளது. இதையடுத்து சீரியலில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு வெகுவாக எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குக் வித் கோமாளி டைட்டில் வின்னர் இவர்தான்.. 2வது, 3வது இடம் யாருக்கு?