Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இளையராஜா இசையில் ஆதி நடித்த ‘க்ளாப்’… பிரபல தொலைக்காட்சி வெளியிட்ட முக்கிய அப்டேட்!

இளையராஜா இசையில் ஆதி நடித்த ‘க்ளாப்’… பிரபல தொலைக்காட்சி வெளியிட்ட முக்கிய அப்டேட்!
, சனி, 11 ஜூன் 2022 (15:40 IST)
ஆதி நடிப்பில் இசைஞானி இளையராஜா இசையமைத்த கிளாப் திரைப்படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது

நடிகர் ஆதி நடிக்கும் படங்கள் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் ரிலிஸ் ஆகி வருகின்றன. அந்த வகையில் அவர் நடித்த கிளாப் படம் நேரடியாக சோனி லைவ் தளத்தில் வெளியானது. இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். ஆதியுடன் ஆகான்ஷா சிங், பிரகாஷ் ராஜ், மைம் கோபி, முனிஷ்காந்த் உள்ளிட்டவர்கள் நடித்த இந்த படத்தை பிரித்வி ஆதித்யா இயக்கி இருந்தார்.. இந்த படம் விளையாட்டை மையமாக வைத்து உருவானது.

ஓடிடியில் வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம் நாளை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நாளை மதியம் 2 மணிக்கு முதல் முறையாக ஒளிபரப்பாக உள்ளது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ப்ரமோஷனுக்காக சீரியலில் நடிக்கும் ’வீட்ல விசேஷம்’ படக்குழுவினர்!