Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இசைஞானி பிறந்த நாளில் சிம்பு செய்யும் மரியாதை

Webdunia
திங்கள், 29 மே 2017 (23:05 IST)
மூன்று வித்தியாசமான வேடங்களில் சிம்பு நடித்து வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் வரும் ஜூன் 2ஆம் தேதி வெளியாகிறது. இந்த நாள் இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.



 


'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தாலும், இளையராஜா ஒரு பாடலை பாடியுள்ளாராம். ரோட்டுல வண்டி ஓடுது என்ற இந்த பாடல் ஆன்மீக வகை பாடல் என்றும் இந்த பாடலை இசைஞானி பாடினால்தான் நன்றாக இருக்கும் என்றும் ஐடியா கொடுத்தவரே சிம்புதானாம்

சிம்புவின் வேண்டுகோளுக்கு இணங்கி இந்த பாடலை இளையராஜா பாடி கொடுத்துள்ளார். இந்த பாடலை வரும் ஜூன் 2ஆம் தேதி இசைஞானி அவர்களின் பிறந்த நாளில் வெளியிட்டே தீரவேண்டும் என்று சிம்பு இயக்குனர் தரப்பில் நெருக்குதல் கொடுத்ததால் இந்த பாடல் கிட்டத்தட்ட இப்போது ரெடியாகிவிட்டதாம். சிம்பு விரும்பியபடியே ஜூன் 2, இசைஞானியின் பிறந்த நாளில் இந்த படத்தின் முதல் பாடல் வெளிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெண்டில் வுமன் இயக்குனரின் அடுத்த படத்தில் விஜய் ஆண்டனி… டைட்டில் அறிவிப்பு!

சமீப வருடங்களில் சிறந்த சினிமா அனுபவம்.. டூரிஸ்ட் பேமிலி படத்தைப் பாராட்டிய ராஜமௌலி!

மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி… எழில் இயக்கத்தில் விஷ்ணுவிஷால்!

ஆகஸ்ட் 29 ஆம் தேதி நாங்க கல்யாணம் பண்ணிக்கப் போறோம்… மேடையில் அறிவித்த விஷால் & தன்ஷிகா!

தக்லைப் படத்தின் சென்சார் தகவல் மற்றும் ரன்னிங் டைம் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments