Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷ், சிம்புவுடன் மோத முடிவெடுத்த செல்வராகவன்

Webdunia
திங்கள், 29 மே 2017 (22:41 IST)
நீண்ட இடைவெளிக்கு பின்னர் செல்வராகவன் இயக்கி முடித்துள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படம் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிந்து சரியான ரிலீஸ் தேதிக்கு காத்திருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் செல்வராகவன் தனது டுவிட்டரில் இந்த படம் வரும் ஜூன் மாதம் ரிலீஸ் ஆகும் என்று பதிவு செய்திருந்தார்



 


இந்த நிலையில் இந்த படம் ரிலீஸ் ஆகும் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் ஜூன் 23ஆம் தேதி ரம்ஜான் திருநாளில் ரிலீஸ் ஆகிறது.

இதே நாளில்தான் சிம்புவின் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்', தனுஷின் 'விஐபி 2' ஆகிய படங்கள் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்வேதா உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பிரபல இயக்குனர் கவுதம் மேனனின் 'ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவும், பிரசன்னா படத்தொகுப்பு பணிகளையும் செய்துள்ளனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வந்தவர்களுக்கும் நன்றி… வராதவர்களுக்கும் நன்றி… ஒத்த ஓட்டு முத்தையா பட நிகழ்ச்சியில் கவுண்டமணி கலகல பேச்சு!

பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

உலக புற்றுநோய் தினத்தில் நடிகை கெளதமி ஏற்படுத்திய விழிப்புணர்வு..!

டிரடிஷனல் லுக்கில் கொள்ளையழகில் ஜொலிக்கும் ஸ்ரேயா…!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments