Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரைத்துறைக்கு தனி வாரியம்: தமிழக அமைச்சர் அறிவிப்பு

Webdunia
திங்கள், 2 ஏப்ரல் 2018 (16:13 IST)
கோலிவுட் திரையுலகினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருவது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த பிரச்சனையை அரசிடம் கொண்டு செல்லவிருப்பதாகவும், இதற்காக ஏப்ரல் 4ஆம் தேதி பிரமாண்டமான பேரணியுடன் தலைமைசெயலகம் சென்று முதல்வர் மற்றும் அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கவிருப்பதாகவும் விஷால் கூறியுள்ளார்.

இந்த நிலையில் சற்றுமுன்னர் செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, 'திரைப்படத்துறைக்கு என ஒரு தனி வாரியம் தேவைப்பட்டால் தமிழக அரசு அமைக்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு திரையுலகினர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இதுகுறித்து தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் கூறியபோது, 'தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான திரைத்துறைக்கு தனி வாரியம் அமைக்கப்படும் என்று உறுதியளித்த அமைச்சர் திரு கடம்பூர் ராஜு அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன், திரைத்துறை சம்மந்தபட்ட அனைத்து கோரிக்கைகளையும் தமிழக அரசு விரைவில் நிறைவேற்றும் என நம்புகின்றோம்' என்றார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கு பிடித்தமானதை பெற்றுவிட்டேன்.. விவாகரத்துக்கு பின் ஏஆர் ரஹ்மான் செய்த செயல்..!

சென்னையில் நடிகர் பாபிசிம்ஹா கார் விபத்து. ஒரு பெண் உள்பட 3 பேர் படுகாயம்..

இன்னும் எத்தனை திருமணம் செய்வார் கமல்ஹாசன்.. அவரே அளித்த பதில்..!

பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் அப்பாஸ்!

சூரி நடிக்கும் ‘மண்டாடி’.. வித்தியாசமான தலைப்பின் அர்த்தம் இதுதானா?

அடுத்த கட்டுரையில்
Show comments