Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காதல் காட்சிகளே இல்லாத ஒரு காதல் படம்- பார்த்திபன் டுவீட்

Advertiesment
காதல் காட்சிகளே இல்லாத ஒரு காதல் படம்- பார்த்திபன் டுவீட்
, வியாழன், 13 ஜனவரி 2022 (23:46 IST)
‘’ அழகி ‘’படம் வெளியாகி 20 வருடங்கள் ஆகும் நிலையில் இதுகுறித்து நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், அழகி age 20! ஊரான் காதலை ஊட்டி வளத்தா,தன் காதலி தானா வளருவான்னு காதலூர் பக்கம் கா(த்)து வாக்குல சொல்லுவாங்க… அப்படி ஆகச்சிறந்த கலைஞன் தங்கர் பச்சானின் அழகியை நான் ஜீவனூற்றி காதலிக்க,அந்தக் காதலை ஊரே போற்றி கொண்டாடி இரு பத்து ஆண்டுகள் இன்றோடு.

எனக்கோ என்றும் காதல் தாண்டா கவிமனது!) எப்டிபண்றதுங்கிறதை கத்துக்கிறதுதான் மைய(ல்) பகுதி of காதல்! சரி matterக்கு வருவோம்…

அழகிக்கு கிடைத்த பாராட்டு முத்தம் ஒவ்வொன்றும் நண்பர் தங்கரையே சேரும். அவரின் அழகிய கன்னி முயற்சியை திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்து திக்குமுக்காட வைத்தது.

காதல் காட்சிகளே இல்லாத ஒரு காதல் படம்-காலத்திற்கும் கொண்டாட காரணம்,ஒப்பனையில்லா நிஜதன்மை நிறைந்த காதல்.எல்லோர் வாழ்விலும் வந்துப் போன (அ) நொந்துப் போன காதல் வடு ‘அழகி’! தேவதாஸ் பார்வதிக்கு பின் சண்முகம் தனலட்சுமி என்றளவில் இன்றளவும் இதயத்தை (20)வருட அழகி age 20!

ஊரான் காதலை ஊட்டி வளத்தா,தன் காதலி தானா வளருவான்னு இன்றளவும் இதயத்தை (20)வருட இன்னொரு காரணம் இசை alias இளையராஜா.நந்திதாதாஸும் நந்தியாக தேவையானியும் தேவையா நீ என்றளவில் நானும் (கையாலாகா காதலன்-காதலை தவிர காதலியை காப்பாற்ற ஏதுமற்றவன்) வாழ்ந்திருப்போம் 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமிர்தாப் அழைத்த பாசக்காரர்- பாக்கியராஜை பாராட்டிய சீனுராமசாமி !