Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இனி ஏ.ஆர்.ரஹ்மானும் வாய்ப்பு தரமாட்டார் - வேதனையில் வைரமுத்து

Advertiesment
Vairamuthu AR Rahman Me Too Chinmayi
, புதன், 24 அக்டோபர் 2018 (18:28 IST)
’இசை பாடும் தென்றல்’ தான் இளையராஜா இசையில் வைரமுத்து பாட்டெழுதிய கடைசி திரைப்படம். பிறகு இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதலால் இன்று வரை அவர்கள் இணையவில்லை என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.
 
மீ டூ விவகாரத்தால் ஏ.ஆர்.ரஹ்மானும் இனி வாய்ப்பு தரமாட்டார் என்பதால் வைரமுத்து மிகுந்த கலக்கத்தில் இருக்கிறார்.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த முதல் படம் ரோஜா. அந்த முதல் படத்திலேயே இந்தியா முழுவதும் உள்ள பலராலும் பேசப்பட்டவர் ஏ.ஆர்.ரஹ்மான். 
 
அப்படி இருக்க வைரமுத்து வரிகளில் அவர் இசையமைத்த பல பாடல்கள் தேசிய விருதை பெற்றுத் தந்திருக்கின்றன. அதனால் வைரமுத்து மீது ரஹ்மான் மிகுந்த நம்பிக்கையை வைத்திருந்தார். மேலும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த பாடல்களை எழுத வைரமுத்துவுக்கே வாய்ப்பு  கொடுத்து வந்தார் ஏ.ஆர்.ரஹ்மான். அதன் அடிப்படையில் ரஹ்மான் இசையில் உருவான பல தமிழ் பாடல்கள்  வைரமுத்து வரிகளில் உருவாகி வெற்றிநடை போட்டது. 
 
இந்நிலையில்  ’மீ டூ’ விவகாரத்தில் பாடகி சின்மயி பாலியல் புகாரளித்துள்ளதால் வைரமுத்து மீது கடும் கோபத்தில் இருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். பொதுவாக இதுபோன்ற சர்ச்சையில் சிக்கிய எவருக்கும் மறுபடியும் வாய்ப்பு வழங்குவதை தவிர்த்து விடுவது ஏ.ஆர்.ரஹ்மானின் வழக்கம். 
 
வைரமுத்து தன் தரப்பு விளக்கத்தை ரஹ்மானுக்கு விளக்கவேண்டும் என்பதற்காக  செல்போனில் பலமுறை தொடர்பு கொள்ள முயன்றபோதும் அதனை தவித்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். ஆக, இனிவரும் காலங்களில் இருவரும் இணைந்து பணிபுரிவது என்பதே கேள்விக்குறியாகியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நல்ல வேளை மீம்ஸ் போட்டு தாளித்திருப்பார்கள் - விஜய் சேதுபதி