சமீபத்தில் நடந்த 99 சாங்ஸ் இசை வெளியிட்டு விழாவில் தொகுப்பாளினி இந்தியில் பேசியதால் வெளியேறியது குறித்து ஏ ஆர் ரகுமான் விளக்கமளித்துள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தயாரித்துள்ள 99 சாங்ஸ் என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அதில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி திடீரென இந்தியில் பேசினார். உடனே “இந்தி?” என கேள்வி எழுப்பியபடி ஏ.ஆர்.ரகுமான் மேடையிலிருந்து கீழே இறங்கி விட்டார். இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து ஏ.ஆர்.ரகுமான் விளக்கம் அளித்துள்ளார்.
அதில் அவர் “இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் வெளியாகிறது. இந்தி பட விழாவில் பாடலாசிரியர் ஆங்கிலத்தில் பேசினர். அப்போது இந்தியில் பேச சொன்னேன். அதேபோல் தான் தமிழ் இசை வெளியீட்டு விழாவில் தமிழில் பேச வேண்டும் என்றேன். அந்த சம்பவத்தின் மூலம் தொகுப்பாளர் பெரிய விளம்பரம் தேடி தந்துவிட்டார். அனைத்து மொழிகளும் உயர்ந்தவைதான். நமது தாய் மொழி தமிழ். அதை யாராலும் மாற்ற முடியாது” என கூறியுள்ளார்.