இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தனது மனைவியை பிரிவதாக அறிவித்த சில நிமிடங்களில், அவரிடம் பணி புரியும் கிதார் கலைஞர் மோகினி என்பவரும் தனது கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தனது மனைவி சாய்ரா பானுவை பிரிவதாக இன்று காலை அறிவித்தார் என்பதும், அவரது இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் தெரிந்தது.
ஏ.ஆர். ரகுமான் விவாகரத்து அறிவிப்புக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை என்ற நிலையில், தற்போது அவரது விவாகரத்து அறிவிப்பு வந்த சில நிமிடங்களில், அவரது இசைக்குழுவில் இடம்பெற்ற கித்தார் இசை கலைஞர் மோகினி, தனது விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
"எனது கணவர் மார்க் ஹார்ட்சுக் என்பவரை விவாகரத்து செய்ய இருப்பதாக" அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.