திருநெல்வேலியில் நெப்போலியன் கட்டியுள்ள மிகப்பெரிய மருத்துவமனை!

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2022 (12:01 IST)
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகரான நெப்போலியன் தென்னிந்தியத் திரைப்பட நடிகரும், அரசியல்வாதியுமாக இருந்தார். தமிழ்த் திரையுலகிற்கு புது நெல்லு புது நாத்து என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் மொத்தம் 70 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
 
தசாவதாரம், விருமாண்டி உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து அசத்தி இருக்கிறார். இவர் சிறந்த நடிகர், சிறந்த அரசியல்வாதி, சிறந்த பிசினஸ் மேன் என்பதையும் தாண்டி சிறந்த கணவர் மற்றும் சிறந்த அப்பா. 
 
ஆம் குடும்பத்துடன் அமெரிக்காவில் 100 ஏக்கர் நிலப்பரப்பில் சொந்தமாக விவசாயம் செய்து வருவதோடு அங்கு பல கோடி மதிப்புள்ள சொந்த வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் தன் மகன் தனுஷின் நினைவாக திருநெல்வேலியில் மிகப்பெரிய மருத்துவமனை ஒன்றை கட்டியுள்ளாராம். 
 
தன் மகன் 10 வயதில் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு கால்கள் செயலிழந்துவிட்டார். அந்த சமயத்தில் நிறைய வைத்தியம் பார்த்துள்ளார். அப்படித்தான் தமிழகத்தில் திருநெல்வேலி பக்கத்தில் பாரம்பரிய வைத்தியம் செய்பவர் பற்றி அறிந்து தனது மகனை அழைத்து சென்றுள்ளார். ஆனால், அங்கு போதிய வசதி இல்லாததால் நோயாளிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். இதை அறிந்த அவர் அங்கு 12 ஆண்டுகளுக்கு முன் பெரிய மருத்துவமனை காட்டியுள்ளார். அங்கு சிகிச்சைக்கு வருபவர்களுக்கு பணம் வாங்குவதே இல்லையாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

என்னை வைத்து சண்டை போடுவதற்கு நீ யார்? பார்வ்தி - கம்ரூதீன் சண்டை..!

அடுத்த கட்டுரையில்
Show comments