‘ஏ’ பட இயக்குநருக்கு கிடைத்த ‘யு’ சான்றிதழ்

Webdunia
வெள்ளி, 1 ஜூன் 2018 (12:59 IST)
‘ஏ’ பட இயக்குநரான சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கியுள்ள மூன்றாவது படத்துக்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது.
‘ஹர ஹர மஹாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ஆகிய படங்களை இயக்கியவர் சந்தோஷ் பி ஜெயக்குமார். அடல்ட் காமெடிப் படங்களான இந்த இரண்டு படங்களுக்கும், மத்திய தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் அளித்தது. இதனால் இவரை ‘ஏ’ பட இயக்குநர் அல்லது ‘பிட்டு’ பட இயக்குநர்  என்றுதான் அழைக்கிறார்கள்.
 
இந்நிலையில், ‘கஜினிகாந்த்’ என தன்னுடைய மூன்றாவது படத்தை இயக்கி முடித்துவிட்டார் சந்தோஷ் பி ஜெயக்குமார். ஆர்யா நாயகனாகவும், ‘வனமகன்’  சயீஷா நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும், சதீஷ், காளி வெங்கட், கருணாகரன், சம்பத் ராஜ், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், உமா பத்மநாபன், ‘ஆடுகளம்’ நரேன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
பாலமுரளி பாலு இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, பாலு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இந்தப் படத்தைப்  பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள், படத்துக்கு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். எனவே, இந்தப் படத்தைக் குடும்பத்துடன் பார்க்கலாம்.

பிரபல நடிகையை சீரழித்த நடிகர் : அம்பலப்படுத்தப் போகும் நடிகை ! கோலிவுட்டில் பரபரப்பு

கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை அந்த காமெடி நடிகர் என்ன செய்கிறார்னு தெரியுமா?

நீயா நானாவுக்கு புது ஆங்கர் தேடனும்... ஹீரோவான கோபிநாத்!!

கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்வோம்...!

இனி இலவசமே கிடையாது; பேசினாலே காசுதான்! ட்ராய் திடீர் முடிவு!

தொடர்புடைய செய்திகள்

பிக்பாஸ் - 3 புகழ் நடிகை மதுமிதா வீட்டில் விருந்து ..டுவீட்டில் மனம்விட்டு பேசிய சேரன்

அரசியல் காட்சியும், நயன் ரொமான்ஸ் காட்சியும் நீக்கம்: பிகில் குறித்து எடிட்டர்

தமிழில் கால் பதிக்கும் சல்மான் : தபாங் தமிழ் ட்ரைலர் வெளியீடு

"ரொமான்டிக்" பாடலில் திரைப்பயணத்தை துவங்கிய திருமூர்த்தி - வீடியோ!

அட்லீ மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஏஜிஎஸ்!

அடுத்த கட்டுரையில்