Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதல்வருக்கு கண்ணீர் மல்க ஒரு கோரிக்கை விடுத்த பிரபல நடிகை

dhivya
, சனி, 8 அக்டோபர் 2022 (15:04 IST)
கணவர் அர்ணவ் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாக சீரியல் நடிகை திவ்யா வீடியோ வெளியிட்டிருந்த நிலையில்,தற்போது முதல்வருக்கு கண்ணீர் மல்க ஒரு கோரிக்கை விடுத்துள்ளார்.
 

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கேளடி கண்மணி என்ற சீரியல் சீரியலில் நடித்துப் பிரபலமானவர் திவ்யா. இவர்,  சமீபத்தில், தன் கணவர் அர்ணவ் தன்னை அடித்துத் துன்புறுத்துவதால், தன் கரு எப்போது வேண்டுமானாலும் கலையலாம் என ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், கணவர் அர்ணவ், 3 மாதக் கருவை கலைக்க திவ்யா தன்   நண்பர் ஈஸ்வருடன் சேர்ந்து முயற்சித்து வருவதாக அவர் ஆவடி  போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சென்று புகாரளித்தார். . மேலும், தான் வீட்டில் இல்லை என்பதற்கு ஆதாரமாக சிசிடிவி காட்சிகள் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று  நடிகை திவ்யா தமிழக முதல்வருக்கு கண்ணீர் மல்க ஒரு  கோரிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், இந்து  மதத்தில் இருந்து  இஸ்லாமிய பெண்ணாக மதம் மாறி செல்லம்மா சீரியல் ஹீரோ அர்னாவை திருமணம் செய்து கொண்டேன். இதனல, வயிற்றில் குழந்தையுடன் தவிக்கும் தனக்கு நியாயம் கிடைக்க முதல்வர் உதவ வேண்டும். 

தன் கணவர் வீட்டில் உள்ள  வீட்டு உபயோகப் பொருட்களுக்கு   நான் தான் தவணைத் தொகை கட்டிவந்தேன். என்னைப் பயன்படுத்திக் கொண்டு   என்னை  நிர்கதியாக விட்டுள்ளனர். அர்னவ்வின் பெற்றோர் என்னையும் என் வயிற்றில் வளரும் குழந்தையையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

Edited by Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சமுத்திரக்கனி அலுவலகத்தில் மர்ம பெண்? சிசிடிவியில் அதிர்ச்சி காட்சி!