Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

''சுவர் ஏறி குதித்து மிரட்டல்''- தன் தந்தை மீது பிரபல நடிகை குற்றச்சாட்டு

Advertiesment
arthana
, வியாழன், 6 ஜூலை 2023 (14:17 IST)
கடைக்குட்டி சிங்கம் பட நடிகை தன் தந்தையின் மீது குற்றாச்சாட்டை கூறியுள்ளார்.

கேரளா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல மலையாள நடிகர் விஜயகுமாரின் மகள்  நடிகை அர்த்தனா. இவர். தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். அதன்பின்னர், மாடலிங்கில் கவனம் செலுத்திய் அவருக்கு சினிமா வாய்ப்புகள் வந்தது.அதன்பின்னர், தெலுங்கு சினிமாவில் சீதா மகாலட்சுமி படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதன்பின்னர், கோகுல் சுரேஷின் மு'துகவ் 'படத்தில் நடித்தார். தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு தொண்டன் என்ற படத்தில் நடித்திருந்தார். பின்னர், ஜிவி பிரகாஷின் செம்ம, நடிகர் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம், வெண்ணிலா கபடிக்குழு 2 படத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.

இவர் கடந்த 10 ஆண்டுகளாக தன் தயார், தங்கையுடன் தாய்வழி பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் தன் சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில், ''என் தந்தை விஜயகுமாரிடம் இருந்து நான், என் அம்மா, தங்கை ஆகிய மூவரும் பிரிந்து வாழ்கிறோம். ஆனால், அவர் சொத்துக்காக சுவ்ர் ஏறி வீட்டிற்குள் அத்துமீறி நுழைகிறார். எனது பெற்றோர் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றவர்கள். எங்கள் பாட்டியின் அஸ்த்து வரும்போது ஆண்டுகளாக அவர் அத்துமீறி வருகிறார். அவர் மீது போலீச் வழக்குகள் உளன.  கதவு பூட்டப்பட்டிருந்தால், திறந்திருக்கும் ஜன்னல் வழியாக எங்களை மிரட்டுகிறார்…மேலும், சினிமாவில் நடிப்பது என் விருப்பம்., என் உடல்நிலை அனுமதிக்கும் வரை தொடர்ந்து நடிப்பேன்…. என் அம்மாவுக்கு அவர் கொடுக்க வேண்டிய நகை மற்றும் பணத்தை மீட்டுத் தரக் கோரி ஆவர் மீது வழக்கு நடந்து வருகிறது'' என்று தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
https://www.instagram.com/reel/CuQ2m_2pxHV/?utm_source=ig_web_copy_link

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லஸ்ட் ஸ்டோரீஸ் மட்டுமில்ல... ரஜினியின் ஜெயிலர் படத்துக்கே டூபீஸ் அணிந்த தமன்னா!