Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துபாயில் வன்கொடுமை செய்ததாக கூறிய நாளில் கொச்சியில் இருந்த நிவின்பாலி: போலி புகாரா?

Siva
வியாழன், 5 செப்டம்பர் 2024 (22:43 IST)
நடிகர் நிவின் பாலி மீது பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்த பெண் ஒருவர், தன்னை அவர் துபாயில் பாலியல் வன்கொடுமை செய்ததாக தனது புகாரில் கூறியிருந்தார். ஆனால் அவர் கூறிய தேதியில் கொச்சியில் உள்ள விடுதியில் நடிகர் நிவின்பாலி தங்கி இருந்த ரசீது வெளியானதை அடுத்து அந்த பெண் கூறியது போலி புகாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 
 
ஏற்கனவே நடிகர் நவீன் பாலி தான் நிரபராதி என்றும் தன் மீது பொய்யான புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும் தான் உண்மையானவன் என நிரூபிக்க எந்த எல்லைக்கும் செல்வேன் என்றும் தெரிவித்து இருந்தார். 
 
மேலும் தன் மீதான புகாரை சட்டப்படி சந்திப்பதாக கூறியிருந்த நிலையில் தற்போது தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் கூறிய அதே நாளில் கொச்சியில் நிவின்பாலி தங்கி இருந்ததற்கான விடுதி ரசிது வெளியாகி உள்ளது.
 
இதனை அடுத்து அந்த பெண் போலியான புகார் கொடுத்துள்ளாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

23 ஆண்டுக்கு பின் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகர்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

’குட் பேட் அக்லி’: தமிழ்நாடு போலவே அண்டை மாநிலங்களிலும் 9 மணிக்கு தான் முதல் காட்சி..!

பழைய பட ரெஃபரன்ஸ் எல்லாம் வொர்க் ஆனதா?… குட் பேட் அக்லி டிரைலர் ரெஸ்பான்ஸ்!

மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்!

பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் ‘கொம்புசீவி’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ ரிலீஸ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்