Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்.. 19ஆம் தேதி போராட்டம் என அறிவிப்பு..!

Webdunia
திங்கள், 9 அக்டோபர் 2023 (18:19 IST)
தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படம் வரும் 19ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில்  விஜய் மீது அகில இந்திய ராஜகுலத்தோர்  பேரவை சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
இந்த புகாரில் ‘லியோ’  திரைப்படத்தில் விஜய் ஆபாச வசனம் பேசி இருப்பதை அடுத்து அவர் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும் ‘லியோ’  திரைப்படம் வெளியாகும் 19ஆம் தேதி திரையரங்குகள் முன் போராட்டம் நடத்தப்படும் என்றும் அகில இந்திய ராஜகுலத்தோர் பேரவை தெரிவித்துள்ளது.  இந்த புகார் மீது சென்னை காவல்துறை ஆணையர் என்ன நடவடிக்கை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
 சமீபத்தில் வெளியான ‘லியோ’  படத்தின் டிரைலரில் ஒரே ஒரு வார்த்தை சர்ச்சைக்குரிய வகையில் இருந்ததை அடுத்து சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்தது. ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அந்த வசனத்திற்கு தானே பொறுப்பு என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜொலிக்கும் ஜிகினா உடையில் அசத்தல் போஸில் ஜான்வி கபூர்!

பச்சை நிற உடையில் ஜொலிக்கும் அழகில் பிரியா வாரியர்!

தேசிய விருது பெற்ற ஜி வி பிரகாஷுக்கு பரிசளித்த ஏ ஆர் ரஹ்மான்!

மம்மூட்டி & மோகன்லால் இணைந்து நடிக்கும் படத்தின் டீசர் ரிலீஸ் அப்டேட்!

ஜீவா நடிக்கும் ‘தலைவர் தம்பியின் தலைமையில்’… தமிழில் அறிமுகமாகும் மலையாள இயக்குனர்!

அடுத்த கட்டுரையில்
Show comments