Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்டனுக்கு கேமியோ..? டீ ஏஜிங் பாத்துட்டு விஜய் சொன்ன வார்த்தை..! - வெங்கட்பிரபு குடுத்த அப்டேட்ஸ்!

Prasanth Karthick
ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2024 (07:03 IST)

ரசிகர்களிடையே நீண்ட எதிர்பார்ப்பில் இருந்த ‘தி கோட்’ படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகியுள்ள நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பல்வேறு கேள்விகளுக்கு இயக்குனர் வெங்கட்பிரபு பதில் அளித்துள்ளார்.

 

 

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் GOAT’. இந்த படத்தில் பிரபுதேவா, ப்ரஷாந்த், அஜ்மல், ப்ரேம்ஜி, சினேஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

 

இந்த படத்தின் பாடல்கள் முன்னதாக வெளியான நிலையில் ‘ஸ்பார்க்’ பாடலில் இளம் விஜய்யை காட்டுவதற்காக செய்யப்பட்ட டீ ஏஜிங் தொழில்நுட்பம் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள டிரைலர் அந்த பிரச்சினைகளை சரிசெய்து வெளியிடப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து பேசிய வெங்கட்பிரபு “டீ ஏஜிங் டெக்னாலஜி பற்றி விஜய்யிடம் சொன்னபோதே ‘பாத்துயா என்ன மாதிரி இல்லாம போயிட போகுது’ என்றார். இது எங்களுக்கு கிடைத்த படிப்பினை. ரசிகர்களுக்கு அது பிடிக்காமல் போனதால் அதை தற்போது மாற்றியுள்ளோம். அதனால்தான் டிரெய்லர் வருவதற்கு தாமதமானது” என்று கூறியுள்ளார்.

 

மேலும் இந்த படத்தில் விஜயகாந்த் ஏஐ தொழில்நுட்பம் மூலமாக கேமியோ ரோலில் வருவதாக பேசிக் கொள்ளப்படும் நிலையில் அதுகுறித்து பத்திரிக்கையாளர்கள் ‘கேமியோ ரோல் உண்டா?” என கேட்டபோது, “இருக்கலாம்” என்று ஒற்றை வரியில் பதில் அளித்துள்ளார் வெங்கட்பிரபு.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'எதிர்நீச்சல் 2' தொடரிலிருந்து நடிகை கனிகா விலகியது ஏன்? வெளியான உண்மை காரணம்!

பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

ட்ரண்ட்டிங் மோனிகா காஸ்ட்யூமில் கலக்கும் எஸ்தர் அனில்!

தமிழ்ப் படங்கள் ஏன் 1000 கோடி ரூபாய் வசூலிக்கவில்லை… இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் பதில்!

ராப் பாடகர் வேடன் மீது மேலும் இரண்டு பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments