Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பைனான்ஸ் பிரச்சனையால் தாமதமாகும் 7ஜி ரெயின்போ காலணி 2!

பைனான்ஸ் பிரச்சனையால் தாமதமாகும் 7ஜி ரெயின்போ காலணி 2!
, வெள்ளி, 18 ஆகஸ்ட் 2023 (09:10 IST)
2004 ஆம் 7ஜி ரெயின்போ காலணி தமிழ் சினிமா கண்ட மிகச்சிறந்த காதல் திரைப்படங்களில் ஒன்று. அந்த படத்தில் தனது மிகச்சிறப்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார் சோனியா அகர்வால். இந்த படம் செல்வராகவனின் சினிமா கேரியரில் ஒரு மிக முக்கியமான வெற்றிப்படமாக அமைந்தது. யுவன் இசையில் நா முத்துக்குமாரின் பாடல்கள் எவர்கீர்ன் சார்ட்பஸ்டர் ஹிட்ஸ்களாக அமைந்தன.

இதையடுத்து இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இரண்டாம் பாகத்தையும் செல்வராகவனே இயக்க, ரவி கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நடிக்க அதிதி ஷங்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.

ஆகஸ்ட் மாதம் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க திட்டமிடப்பட்டு இருந்த நிலையில் தயாரிப்பாளர் ஏ எம் ரத்னத்தின் பைனான்ஸ் பிரச்சனைகள் காரணமாக இப்போது படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் நடிகர் ரவி கிருஷ்ணாவை வைத்து லுக் டெஸ்ட்டை சமீபத்தில் இயக்குனர் செல்வராகவன் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வித்தியாசமான உடையில் அமலா பாலின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!