Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பைனான்ஸ் பிரச்சனையால் பாதியில் நிற்கும் 7 ஜி ரெயின்போ காலணி பார்ட் 2!

Webdunia
செவ்வாய், 19 டிசம்பர் 2023 (07:18 IST)
2004 ஆம் 7ஜி ரெயின்போ காலணி தமிழ் சினிமா கண்ட மிகச்சிறந்த காதல் திரைப்படங்களில் ஒன்று. அந்த படத்தில் தனது மிகச்சிறப்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார் சோனியா அகர்வால். இந்த படம் செல்வராகவனின் சினிமா கேரியரில் ஒரு மிக முக்கியமான வெற்றிப்படமாக அமைந்தது. யுவன் இசையில் நா முத்துக்குமாரின் பாடல்கள் எவர்கீர்ன் சார்ட்பஸ்டர் ஹிட்ஸ்களாக அமைந்தன.

இதையடுத்து இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது. இரண்டாம் பாகத்தையும் செல்வராகவனே இயக்க, ரவி கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கிறார். கடந்த மாதம் இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் தொடங்கியுள்ளது. அங்குள்ள ஒரு அபார்ட்மெண்ட்டில் செல்வராகவன் ரவிகிருஷ்ணா நடிக்கும் சில காட்சிகளைப் படமாக்கியுள்ளார் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங் இன்னும் தொடங்கவில்லை. அதற்குக் காரணம் படத்தின் தயாரிப்பாளரால் ஷூட்டிங்குக்கு தேவையான தொகையை தயார் செய்ய முடியவில்லை என்பதுதான் என்று சொல்லப்படுகிறது. விரைவில் அடுத்த கட்ட ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

சமந்தாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

வேட்டையன் உங்கள ஏமாத்தாது.. ரஜினிகாந்த் கொடுத்த அப்டேட்!

“ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விஜய்யை அறைந்த SAC..”- பிரபல இயக்குனர் பகிர்ந்த சம்பவம்!

நெகட்டிவ் விமர்சனம் இருந்தும் அதிர்ச்சியளுக்கும் தேவர முதல் நாள் வசூல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments