Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

15 நாட்களில் தொடர்ந்து 4 வது மாடலிங் பெண் தற்கொலை!

Advertiesment
saraswathi  doss
, செவ்வாய், 31 மே 2022 (17:57 IST)
கொல்கத்தாவில் 15 நாட்களில் ஏற்கனவே 3  மாடலிங் பெண்கள் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து 4  வதாக ஒரு மாடலிங் பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கொல்கத்தாவில் வங்க மொழி நடிகையான பிதிஷாவை தொடர்ந்து அவரது தோழியும் வங்காளத்தில் பிரபல மாடலாகவும், பட நடிகையாகவும் இருந்து வந்தவர் பிதிஷா. கொல்கத்தா நகரில் டம்டம் என்ற இடத்தில் நாகர்பஜார் பகுதியில் வாடகை குடியிருப்பில் வசித்து வந்த பிதிஷா கடந்த 25ம் தேதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,   மேற்கு வங்க மா நிலம் கொல்கத்தாவில் மாடலிங் பெண் சரஸ்வதி தாஸ் (18). தனது வீட்டில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார்.  இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது தற்கொலை என்றாலும் இயற்கைக்கு மாறான மரணம் என போலீசார் வழக்குப் பதிவு செய்தது  விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

கடந்த சில நாட்களில் மட்டும் 4 மாடலிங் பெண்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமலின் ''விக்ரம்'' படத்திற்கு அதிக கட்டணம் வசூல்?