சென்னை 28 படம் 2007 ஆம் ஆண்டு வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளியானது. தற்போது இந்த படத்தின் பார்ட் 2 நாளை வெளியாக உள்ளது.
முதல் பாகம் பெறும் வெற்றி பெற்றதை அடுத்து இரண்டாம் பாகத்தின் மீது மக்களின் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த எதிபார்ப்பை மேலும் அதிகரிக்கும் வண்ணம் படத்தின் நான்கு நிமிட காட்சி வெளியிடப்பட்டுள்ளது.
முதல் பாகத்தில் இருந்த ஜெய், சிவா, பிரேம்ஜி, விஜய் வசந்த் மற்றும் நிதின் சத்யா கூட்டணி இதிலும் உள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த நான்கு நிமிட காட்சியில் ஜெய், சிவா, பிரேம்ஜி, அஜய், நிதின் சத்யா, விஜய் வசந்த் ஆகியோர் பாரில் குடித்துக்கொண்டே ஜெய் கல்யாணத்துக்கு ப்ளான் போடுவது போல் உள்ளது.