Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படப்பிடிப்பு முடிவதற்குள்ளே கோடிகளை அள்ளி குவிக்கும் "மாஸ்டர் " - விறு விறு வியாபாரம்!

Webdunia
வெள்ளி, 17 ஜனவரி 2020 (11:44 IST)
பிகில் படத்தை தொடர்ந்து கைதி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் "மாஸ்டர்" படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர். 
 
ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லி, கர்நாடகா ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது. வருகிற ஏப்ரல் மாதம் கோடை விடுமுறை தினத்தை குறி வைத்து வெளியாகவுள்ள இப்படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பொதுவாக பெரிய நடிகர்களின் படம் என்றாலே ரிலீசுக்கு முன்னரே படத்தின் படஜெட்டை விட அதிகாமாக லாபம் ஈட்டிவிடும். அந்தவகையில் தற்போது படப்பிடிப்பு கூட முழுமையாக நிறைவடையாத நிலையில் விஜய்யின் மாஸ்டர் படம் பல கோடிகளை சம்பாதித்துள்ளது. அதாவது, 
 
தமிழ்நாட்டு உரிமை ரூ.80 கோடி, 
வெளிநாட்டு உரிமை ரூ.30 கோடி, 
தெலுங்கு உரிமை ரூ.10 கோடி, 
கேரளா உரிமை ரூ.9 கோடி, 
கர்நாடகா உரிமை ரூ.10 கோடி, 
ஹிந்தி & சாட்டிலைட் & டிஜிட்டல் உரிமை ரூ.25 கோடி, 
தமிழ் சாட்டிலைட் உரிமை ரூ.30 கோடி, 
தமிழ் டிஜிட்டல் உரிமை ரூ.20 கோடி, 
ஆடியோ உரிமை ரூ.5 கோடி 
 
என இதுவரை மொத்தம் ரூ.219 கோடி ரூபாய் வரை வியாபாரம் நடைபெற்றிருக்கிறது என நமத்து தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது. படத்தின் பட்ஜெட்டே 150 கோடி தான். அப்படியிருக்க ரிலீசுக்கு முன்னரே சுமார் 70 கோடி வரை லாபத்தைப் பார்த்துவிட்டது மாஸ்டர் படம். இந்த சம்பாத்தியம் ரஜினியின் தர்பார் படத்தை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல்… முதல் நாள் வசூலில் அடிவாங்கிய ‘வீர தீர சூரன்’

தென்னிந்திய நடிகர்கள் அதை செய்வதில்லை… வெளிப்படையாக வருத்தத்தைப் பதிவு செய்த சல்மான் கான்!

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments