Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

1000 பேரை ஆடிஷன் செய்த ஏ.ஆர்.ரஹ்மான்

Advertiesment
1000 பேரை ஆடிஷன் செய்த ஏ.ஆர்.ரஹ்மான்
, வெள்ளி, 20 அக்டோபர் 2017 (09:58 IST)
தன்னுடைய ‘99 சாங்ஸ்’ படத்தில் நடிப்பதற்காக 1000 இளைஞர்களை ஆடிஷன் செய்து, அதிலிருந்து இரண்டு பேரைத்  தேர்ந்தெடுத்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

 
ஏ.ஆர்.ரஹ்மான் கதை எழுதி, தயாரிக்கும் படம் ‘99 சாங்ஸ்’. ரொமாண்டிக் மியூஸிக்கல் படமான இது, தமிழ் மற்றும்  ஹிந்தியில் தயாராகிறது. ஏ.ஆர்.ரஹ்மானே இந்தப் படத்துக்கு இசை அமைக்கிறார். 10 அல்லது 12 பாடல்கள் இந்தப் படத்தில் இடம்பெறும் எனத் தெரிவித்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
 
இந்தப் படத்தில் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கும் இரண்டு பேரை செலக்ட் செய்வதற்காக, 1000 இளைஞர்களை ஆடிஷன் செய்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். பல்வேறு திறமைகள் கொண்ட இரண்டு பேரைத் தேர்ந்தெடுத்து, ஹாலிவுட்டில் நடிப்புப் பயிற்சி பெறவைத்துள்ளனர். அத்துடன், ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பள்ளியில், இசைக்கருவிகளை எப்படி வாசிக்க வேண்டும்  என்று ஒரு வருடம் பயிற்சி அளித்துள்ளனர். மியூஸிக்கல் படம் என்பதால், இசைக்கருவிகளை வாசிக்கத் தெரிந்திருக்க  வேண்டும்.
 
விரைவில் இந்தப் படம் இந்தியாவில் ஷூட்டிங் தொடங்குகிறது. அதன்பிறகு, உக்ரைனில் இந்தப் படத்தின் பெரும்பாலான  காட்சிகளைப் படம்பிடிக்க இருக்கிறார்கள்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்த ஓவியா....